போச்சம்பள்ளி பகுதியில் கண்ணை கவரும் குருவி கூடுகள்
10/15/2019 3:21:01 AM
போச்சம்பள்ளி, அக்.15: போச்சம்பள்ளி பகுதியில் தூக்கணாங்குருவி கூடுகள் அதிகம் காணப்படுகிறது. போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில், கடந்த 2 ஆண்டுகளாக மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும், நீர் நிலைகள் வறண்டு, குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில், கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால், வறண்டு காணப்பட்ட நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது. ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் நிறைந்துள்ளதால், வயல்வெளிகளில் உழவுப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்டவற்றை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் அழிவின் விளிம்பில் இருந்த தூக்கணாங்குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்குள்ள கிணறு மற்றும் உயரமான மரங்களில் தூக்கணாங்குருவிகள் ஏராளமான கூடுகள் கட்டி உள்ளன. போச்சம்பள்ளி, புளியம்பட்டி, வேலம்பட்டி, நெடுங்கல், பாரூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல், சோளம், கம்பு, ராகி, உள்ளிட்ட தானிய பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன. இதனால், தூக்கணாங்குருவிகளின் உணவு தேவை பூர்த்தி அடையும் என்பதால், இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கலைநயத்துடன் நுட்பமாக காணப்படும் இந்த கூடுகளை, அவ்வழியாக செல்பவர்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
மேலும் செய்திகள்
கலெக்டர் ஆபிசில் பொதுமக்கள் தர்ணா
பொங்கல் விழாவையொட்டி அரூரில் முயல் விடும் நிகழ்ச்சி
அரூர் அருகே 6 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய மைலன் ஏரி
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா
அரூரில் எருதுவிடும் விழா
₹1.53 கோடி மதிப்பில் சாலை பணிகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்