SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாதனைகளை கூறி காங்கிரசால் ஓட்டு கேட்க முடியவில்லை

10/15/2019 12:09:02 AM

புதுச்சேரி, அக். 15: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா (எ) புவனேஸ்வரனை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று ரெயின்போ நகர், செந்தாமரை நகரில் வீடு, வீடாக சென்று ஜக்கு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயபால், டிபிஆர் செல்வம், சுகுமாறன், கோபிகா, வேட்பாளர் புவனேஸ்வரன், அன்பழகன் எம்.எல்.ஏ, மாநில துணை செயலாளர் கணேசன், சாமிநாதன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர். பிரசாரத்தின் போது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறுகையில், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு என்ன திட்டங்கள் கொண்டு வந்தார்கள்? செய்தார்கள் என்பதை மக்களுக்கு சொல்லி காங்கிரசார் ஓட்டு கேட்க வேண்டும். பொய் பிரசாரம் செய்ய வேண்டிய வேலை எங்களுக்கு இல்லை. அரசு எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தோம் என்று கூறி காங்கிரசாரால் வாக்கு சேகரிக்க முடியவில்லை. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்ற தேர்தல் வாக்குறுதிபடி இளைஞர்களுக்கு வேலை கொடுத்தீர்களா? எத்தனை புதிய தொழிற்சாலை கொண்டு வந்தீர்கள்? காரைக்காலில் எத்தனை தொழிற்சாலை கொண்டுவந்தீர்கள்? ஒரே ஒரு தொழிற்சாலையாவது புதிதாக வந்துள்ளதா? எதிர்க்கட்சிகள் மற்றும் துணை நிலை ஆளுனர் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்ள நினைக்கிறீர்கள். வெறுமனே காலத்தை கடத்தி புதுச்சேரியை சீரழித்தது போதும். தற்போதைய முதல்வர் மத்திய அமைச்சராக இருந்தார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டபோது, அதற்கு உங்களுக்கு அதிகாரம் கேட்கிறீர்களா? துணைநிலை ஆளுநருடன் அனுசரித்துதான் போக வேண்டும் என்று கூறியவர்தான் நாராயணசாமி. மேலும் அப்போதைய ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவை பேக்கரி கடைக்கு அழைத்து வந்து உட்கார வைத்தவர்தான் இப்போதைய நாராயணசாமி. தனி மாநில அந்தஸ்துக்கு மாறாக, போகாத ஊருக்கு வழி கூறுவதைப் போல் சிறப்பு மாநில அந்தஸ்து கேளுங்கள் என்றார். அதேசமயம் தற்போதுள்ள அதே அதிகாரத்தை வைத்துக் கொண்டே நாங்கள் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றினோம். கடைசி நேரத்தில் கூட நல்ல தரமான மிக்சி, கிரைண்டரை மக்களுக்கு கொடுத்தோம். அதை ரோட்டில் உடைக்கும் நான்காம் தர அரசியல்வாதி நாங்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-02-2021

  26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • modipuudddhh

  புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!

 • maaaaaaaaa

  பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!

 • icvator25

  3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!

 • sheep25

  ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்