நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்
10/12/2019 7:11:53 AM
அண்ணாநகர்: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் துரை (56). இவரது மகன் வடிவேல் (25). லாரி டிரைவர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை செங்குன்றத்தில் இருந்து லாரியில் செங்கல் ஏற்றிக் கொண்டு மதுரவாயல் வழியாக சென்று கொண்டிருந்தனர். லாரி டிரைவர் துரை உட்பட 3 பேர் முன்பக்கம் அமர்ந்து சென்றனர். மேலும், செங்கல் மீது ஒருவர் அமர்ந்து சென்றார். திருமங்கலம் 100 அடி சாலை வழியாக சென்றபோது, எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் முன்பக்க டயர் வெடித்ததால், சாலையின் குறுக்கே லாரி கவிழ்ந்தது. இதனால், டிரைவர் உள்பட லாரியில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வில்லிவாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கிரேன் மூலம் லாரியை அகற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
பயங்கர சத்தத்துடன் ஏடிஎம் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு: சிசிடிவி மூலம் ஆசாமிக்கு வலை
தாம்பரத்தில் நூலகம், மீன் மார்க்கெட் சமுதாய நலக்கூடம் திறப்பு: டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்பு
பிரபல நகைக்கடையில் 5.20 கிலோ தங்கம் கொள்ளையடித்த ஊழியரை பிடிக்க ராஜஸ்தான் விரைந்தது தனிப்படை: செல்போன் எண் மூலம் நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா
சென்னை கிழக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேர்தல்: திமுக தலைமை அறிவிப்பு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!