குரங்கணி காவல்நிலையம் அருகே கஞ்சா, ‘சரக்கு’ விற்பனை ஜோர்
10/10/2019 6:41:06 AM
போடி, அக். 10: குரங்கணி காவல்நிலையம் அருகே கஞ்சாவும், டாஸ்மாக் சரக்கும் படுஜோராக விற்பனையாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் பாராமுகமாய் இருப்பதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டகுடி கிராமம் உள்ளது. நரிப்பட்டி, குரங்கணி, கொழுக்குமலை, முட்டம், சென்ட்ரல், முதுவாக்குடி, டாப்டேஷன் உட்கிடை கிராமங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மலையும், மழை சார்ந்த இடமுமாக இருப்பதால் எப்போதும் குளிரும், வெயிலும் சரிசமமாக இருக்கும்.இதனால் இந்த மலைப்பகுதிகளில் கஞ்சா விற்பனை டாப்ஸ்டேஷன் வரை சர்வசாதாரணமாக நடக்கிறது. அதே போல டாஸ்மாக் சரக்கை மொத்தமாக வாங்கி குரங்கணி மலைப்பகுதிகளில் பதுக்கின்றனர். குரங்கணி காவல் நிலையம் செல்லும் பாதையிலேயே டாஸ்மாக் சரக்குகளை பயமின்றி கூடுதல் விலைக்கு சிலர் விற்று வருகின்றனர். இதனால் தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் போதையின் பிடியில் சிக்கி வருகின்றனர்.
கஞ்சா மற்றும் டாஸ்மாக் சரக்குகளை அனுமதியின்றி விற்பதையும் போலீசார் கண்டும் காணாமலும் இருப்பதால், கிடைக்கின்ற கூலியை போதைக்கு செலவழித்து விட்டு கணவன்மார்கள் வீடு திரும்புவதாக பெண்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து குரங்கணி காவல்நிலையத்தில் புகார் செய்தும் அவர்கள் பாராமுகமாய் இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, குரங்கணி காவல்நிலையம் அருகே கஞ்சா, டாஸ்மாக் சரக்கு விற்பவர்கள் மீது தேனி எஸ்பி பாஸ்கரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
கழிவுகளை கொட்டுவதால் மாசுபடும் கண்மாய்
வேன் மோதி கல்லூரி மாணவர் பலி
மயிலாடும்பாறை அருகே நாட்டுதுப்பாக்கி பறிமுதல் கூலித்தொழிலாளி கைது
10 மாதங்களுக்கு பிறகு தேனி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் உற்சாகம்
கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் அம்பேத்கர் காலனியில் அச்சுறுத்தும் ரேஷன் கடை பணியாளர்கள், பொதுமக்கள் அச்சம்
கம்பத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!