முத்துப்புதூர் மாநகராட்சி பள்ளிக்கான புதிய கட்டிடத்தில் ஆஸ்பெட்டாஸ் சீட் கூரை அமைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு
10/10/2019 1:09:59 AM
திருப்பூர், அக்.10: திருப்பூர் பழைய பஸ் நிலையத்தின் தென்பகுதியில் முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்த பள்ளியை காலி செய்துவிட்டு பல அடுக்கு வாகன நிறுத்தம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இவர்களின் எதிர்ப்பையும் மீறி இப்பள்ளியை கே.எஸ்.சி. அரசு பள்ளி பின்புறம் உள்ள மாநகராட்சி பொது சுகாதாரப்பிரிவில் பிறப்பு மற்றும் இறப்பு அலுவலக வளாகத்தில் இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் கட்டிடப் பணிகளும் வெகுவேகமாக நடைபெற்று வருகின்றன. 15 நாட்களுக்குள் கட்டிடப் பணிகள் முழுமை அடைந்துவிடும். ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரையாக அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதற்கு குழந்தைகளின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், புதிய வளாகத்தில் போதிய கட்டிட வசதி மற்றும் கழிப்பறை உட்பட பல்வேறு வசதிகள் முழுமையாக ஏற்பாடு செய்து தரப்படும் என பேச்சுவார்த்தையில் உறுதி அளிக்கப்பட்டது. நகரின் வளர்ச்சியும், பள்ளிக் குழந்தைகளின் கல்வியும் இரண்டும் முக்கியம். ஆகவே பள்ளி வளாகத்தை அங்கு மாற்றுவதாகக் கூறி, தேவையான வசதிகள் செய்து தருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நடப்பாண்டில் 5 மாதத்துக்கு அனைத்து குழந்தைகளையும் துளசிராவ் வீதியில் ஒருங்கிணைத்து வாகனத்தில் அழைத்து செல்ல மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி அங்கு நிரந்தரமாக செயல்பட இருப்பதால், எங்களுக்கு மேற்கூரையானது சிமெண்ட் கூரை போடாமல், கட்டிடமாக கட்டித்தந்தால் மட்டுமே மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றனர்.
மேலும் செய்திகள்
வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
இறுதி பட்டியல் வெளியீடு 8 சட்டமன்ற தொகுதிகளில் 23,52,785 வாக்காளர்கள்
வரியினங்களை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் திருப்பூரில் ஆர்ப்பாட்டம்
உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்
உரிய தண்ணீர் திறக்காததை கண்டித்து விவசாயிகள் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!