திருப்பூரில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துவங்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
10/10/2019 1:09:44 AM
திருப்பூர், அக்.10: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் முத்துக்கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இது தவிர கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் சார்பு தொழில்களிலும் ஏழை, எளிய சாமானிய மக்கள், சமூக ரீதியாக பின்தங்கியோர் பல லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ வசதி எளிதில் கிடைக்கக்கூடியதாக இல்லை. உயிர் காக்கும் மற்றும் விபத்து சிகிச்சைகள் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவு செய்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் பல ஆயிரம் குடும்பங்கள் கடனில் சிக்கும் நிலை உள்ளது. இம்மாவட்டம் உருவாகி 10 ஆண்டுகள் கடந்த பின்னும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உருவாக்கப்படாமல் இழுத்தடிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே உயிர் காக்கும் சிகிச்சை, எலும்பு முறிவு, நரம்பியல் நோய்கள் உள்பட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் கிடைக்கும் விதத்தில் திருப்பூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உடனடியாகத் தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. எனவே நோயாளிகள் பயனடையும் வகையில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வர சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
இறுதி பட்டியல் வெளியீடு 8 சட்டமன்ற தொகுதிகளில் 23,52,785 வாக்காளர்கள்
வரியினங்களை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் திருப்பூரில் ஆர்ப்பாட்டம்
உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்
உரிய தண்ணீர் திறக்காததை கண்டித்து விவசாயிகள் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!