SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூரில் இருந்து திருச்சிக்கு அதிகாலையில் ரயில் விட வேண்டும் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்

10/10/2019 12:29:21 AM

திருவாரூர், அக்.10: தமிழகத்தின் பிரதான நகரங்களில் ஒன்றாக திருச்சி விளங்கி வருகிறது. கிழக்கு டெல்டா மாவட்ட பகுதிகள் குறிப்பாக நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளிலிருந்து ஆடைகள் வாங்குவதற்கோ, மருத்துவ மேல் சிகிச்சைக்காகவோ, பாஸ்போர்ட் மற்றும் பல்கலைகழகம், கல்லூரிகள், விமான நிலையம், முக்கிய அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்களுடைய எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. திருவாரூர் நகரில் புதிய பேருந்து நிலையம் சென்றுதான் பஸ் ஏறி திருச்சி செல்ல வேண்டும் என்பதால் மக்கள் ரயில் பயணத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். ஏனெனில் நகரின் மையத்தில் ரயில்நிலையம் அமைந்துள்ளது. தற்போது காரைக்காலில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் பயணிகள் ரயில்தான் முதல் ரயிலாக உள்ளது. இந்த ரயில் திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு திருச்சிக்கு புறப்படுகிறது. அநேக நாட்கள் இந்த ரயில் மதியம் 12.30 மணியை கடந்துதான் திருச்சிக்கு செல்கிறது. திருச்சியில் இருந்து மாலை 4.30க்கு காரைக்கால் செல்லும் ரயில் உள்ளது.

இடைப்பட்ட நேரத்தில் மக்களால் எதையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. நோய்வாய்ப்பட்டவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் போன்றவர்களுக்கு ரயில் பயணம்தான் ஏற்றதாக உள்ளது. முக்கிய காரணம் கழிவறை வசதி. தவிர இன்றைய சூழலில் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவும் ஒரு காரணமாகும். இதை கருத்தில் கொண்டு அதிகாலையில் திருவாரூரிலிருந்து திருச்சிக்கு ரயில் இயக்க வேண்டும் என பல வருடங்களாக நாங்கள் கோரிக்கை விடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து பரிந்துரைத்தும் தென்னக ரயில்வே மக்கள் நலனுக்கான இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அனைத்து மக்களையும் கவனத்தில் கொண்டு தென்னக ரயில்வே அதிகாலையில் திருவாரூரிலிருந்து திருச்சிக்கு ஒரு ரயிலையும், அதேபோல் இரவு 7.30க்கு திருச்சியிலிருந்து திருவாரூர் நகருக்கு ஒரு ரயிலும் இயக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் பொதுமக்கள் பலன் பெறுவதோடு ரயில்வே துறையினருக்கும் வருவாய் அதிகரிக்கும். இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-01-2021

  28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • jayallithaa_mmeerrr

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

 • 27-01-2021

  27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்