ஆவடி அரசு மருத்துவமனையில் 4 மாதமாக மூடிக்கிடக்கும் பிரேத பரிசோதனை கூடம்
10/2/2019 1:22:14 AM
ஆவடி, அக்.2: ஆவடி பகுதியை சுற்றி ஆவடி, பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை, திருநின்றவூர், ஆவடி டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல், அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. மேற்கண்ட காவல் நிலைய பகுதிகளில் நடைபெறும் இயற்கை மரணங்களுக்கு பிரேத பரிசோதனை செய்ய அவசியம் இல்லை. ஆனால், கொலை, தற்கொலை, விபத்தினால் மரணம் ஆகியவற்றிற்கு பிரேத பரிசோதனை செய்து இறப்பிற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்பது சட்டமாகும். அந்த வகையில் மேற்கண்ட காவல் நிலைய பகுதியில் நடைபெறும் செயற்கையான முறையில் நடைபெறும் மரணத்திற்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமானால் திருவள்ளூர், கீழ்ப்பாக்கம், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு தான் செல்ல வேண்டும். இதனை தவிர்க்க ஆவடி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தனை அடுத்து, அரசு ரூ.30லட்சம் செலவில் பிரேத பரிசோதனை அறை கட்டப்பட்டது. இந்த கூடம் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது. இதன் பிறகு, அங்கு 9 சடலங்கள் பிரேத பரிசோதனை நடந்தது. இதனால், ஆவடி சுற்றுபுறப்பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக இருந்து வந்தது. இவர்கள் சென்னை, திருவள்ளூர் செல்லுவது தவிர்க்கபட்டது.
இதன் பிறகு, அங்கு ஊழியர்கள், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், கடந்த 4மாதங்களாக பிரேத பரிசோதனை கூடம் இயங்காமல் மூடிக்கிடக்கிறது. தற்போது, சடலங்களை பிரேத பரிசோதனை செய்ய சென்னை, திருவள்ளூருக்கு அலைய வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் கொலை, தற்கொலை, விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்பவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் பெரும்பாலும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இதனால் மக்களுக்கு பொருட்சேதமும், கால விரையமும் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். மேலும், சடலத்தை எடுத்து செல்ல ஆகவும் வாகன செலவையும் இறந்தவரின் உறவினர்கள் ஏற்க வேண்டியதுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இருப்பதுபோன்று இரு சடலங்கள் வைக்கும் வகையில் குளிர்சாதனப் பெட்டி ஆவடி பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ளது. மேலும், ஒரே நேரத்தில் இரு சடலங்களுக்கு மேல் வந்தால் சேமித்து வைக்க குளிர் சாதன பெட்டியில் இடம் இல்லை. இதோடு மட்டுமல்லாமல், மின்சாரம் தடைப்பட்டால் ஜெனரேட்டர் வசதியில்லாததால் சடலங்கங்களை குளிரூட்ட முடியாது. இதனால் ஆவடி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு ஜெனரேட்டர், அதிக சடலங்களை சேமிக்க குளிர்சாதனப் பெட்டிகள் வசதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும் செய்திகள்
கோயிலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
ஆதார் திருத்த சிறப்பு முகாம்
திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகள்: சீரமைக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் மனு
திருவள்ளூர் ஆர்டிஓ அலுவலகத்தில் உருக்குலைந்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
திருமணம் ஆகாத ஏக்கம் இளம்பெண் தற்கொலை
கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்