பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
10/2/2019 1:03:26 AM
ஈரோடு, அக். 2: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிபாரதி முன்னிலை வகித்தார்.ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளன்று ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் மற்றும் 17பி குற்றச்சாட்டு வழங்குவதையும் கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மத்திய அரசு வழங்குவதை போல மாநில அரசும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவபடி வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே நேரடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகை மற்றும் ஏபிசிடி பிரிவு ஓய்வூதியர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை போனசாக வழங்க வேண்டும். அரசாணை 56யை ரத்து செய்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காப்பீட்டு திட்ட குறைதீர்க்கும் கூட்டத்தையும், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் காலமுறை கூட்டத்தையும் முறையாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் செய்திகள்
பவானி அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி பெண் பலி
பு.புளியம்பட்டி சந்தையில் விதை வெங்காயம் விலை குறைந்தது
தாளவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்து வீட்டின் கூரையை சேதப்படுத்திய யானை
தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 1,300டன் புழுங்கல் அரிசி
ஈரோடு அரவிந்த் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
இந்து இண்டர்நேஷனல் பள்ளி ஆச்சார்யா கல்விக்குழுமத்துடன் இணைப்பு
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!