குலசேகரத்தில் ரகசிய இடத்தில் செயல்பட்ட பிளாஸ்டிக் குடோன்
10/2/2019 12:10:43 AM
குலசேகரம், அக். 2: உலகம் முழுவதும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளால் இயற்கை அழிவதுடன் சுகாதார கேடுகளும் ஏற்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென்ற விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓரளவு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. முழுமையான நடவடிக்கை இல்லாததால் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் கட்டுபடுத்த முடியவில்லை. மறைமுகமாக பதிக்கி வைத்து சப்ளை செய்வதும் அண்டை மாநிலத்திலிருந்து பைக் மற்றும் கார்களில் கொண்டு சென்று சந்தை மற்றும் கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி இவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனர். இந்த நிலையில் குலசேகரம் மணலிவிளை பகுதியில் ஒதுக்கு புறமான இடத்தில் பிளாஸ்டிக் குடோன் உள்ளதாக குலசேகரம் பேரூராட்சி அலுவலகத்திற்க்கு தகவல் கிடைத்ததையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் அந்த குடோனை திறந்து சோதனை நடத்த முயற்சித்தனர். அதற்கு அதன் உரிமையாளர் ஒத்துழைக்காததால் குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஐ சுந்தரலிங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதனையடுத்து போலீசார் முன்னிலையில் குடோன் திறக்கப்பட்டது. அங்கு பல லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கைபற்றி டெம்போவில் ஏற்றி சென்றனர். இதனை பதுக்கி வைத்திருந்த செரிப் என்பருக்கு 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
நவம்பர் மாதம் மாநகராட்சி புதிய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்
ஆயுஷ் பயன்பாடு குறித்த மாதிரி கணக்கெடுப்பு
108 கிலோ புகையிலை பறிமுதல்
என்ட் டூ என்ட் பஸ்கள் மீண்டும் கண்டக்டர் இல்லாமல் இயக்கம்
வட கிழக்கு பருவமழை, சபரிமலை சீசன் எதிரொலி குமரி வன பகுதியில் யானை கூட்டங்கள் வர வாய்ப்பு
கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீர் தாழ்வு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!