SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரியலூர் மாவட்டத்தில் பேரீச்சை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மானியம் பெறலாம் விண்ணப்பிக்க அழைப்பு

9/20/2019 12:27:52 AM

அரியலூர்,செப்.20: அரியலூர் மாவட்டத்தில் பேரீச்சை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார். இது குறித்து அரியலூர் கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பேரீச்சம் பழம் ஒரு ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த ஆரோக்கியமான பழமாகும். உலக சந்தையில், இந்தியா கிட்டத்தட்ட 35% பேரீச்சம் பழத்தினை இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தேவை அதிகம் இருப்பதால் பேரீச்சையை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.பொதுவாக பேரீச்சை அரபு நாடுகளில் உள்ள பாலைவனங்களில் அதிகமாக வளரக்கூடியவை. ஆனால் இதர இடங்களிலும் பேரீச்சை மரங்களை நல்ல முறையில் சாகுபடி செய்யலாம். தமிழ்நாட்டில் வணிகரீதியாக தர்மபுரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 100 ஏக்கர் பரப்பில் பேரீச்சை சாகுபடி செய்து விவசாயிகள் லாபம் அடைந்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் விவசாயிகள் பேரீச்சை சாகுபடி செய்வதை ஊக்குவிப்பதற்காக தோட்டக்கலைத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் வாயிலாக 2019-20 ம் ஆண்டில் பேரீச்சை சாகுபடி செய்வதற்கு ஒரு எக்டருக்கு 30,000 என்ற விகிதத்தில் மானியம் வழங்கப்படுகிறது.

பேரீச்சை விதைகள் மற்றும் திசு வளர்ப்பு செடிகள் மூலமாக சாகுபடி செய்யலாம். பொதுவாக எக்டருக்கு 175 செடிகள் என்ற விகிதத்தில் நடலாம். நல்ல மகசூல் பெற செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்வது அவசியமாகிறது. பயிர் இழப்பை குறைப்பதற்காக சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சலாம். நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு,குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75% மானியமும், அரசால் வழங்கப்படுகிறது. நன்றாக பராமரிக்கப்பட்ட சூழலில் சராசரியாக மரம் ஒன்றுக்கு 200 கிலோ முதல் 300 கிலோ வரை விளைச்சல் பெறலாம்.பேரிச்சை சாகுபடி பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பேரீச்சை சாகுபடி செய்ய மானியம் பெற உழவன் செயலி மூலமாகவும், அந்தந்த மாவட்டத்திலுள்ள தோட்டக்கலை துணை இயக்குநரையோ அல்லது வட்டார அளவில் தோட்டக்கலை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை அலுவலர் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலரையோ அணுகலாம் என கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

 • monkey_thaayklannn1

  குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

 • eelephanttt11

  35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த உலகின் தனிமையான காவன் யானைக்கு புதிய வாழ்க்கை : துதிக்கையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

 • muskes_ambani11

  27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

 • delhi_farmnmmmeee

  திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்