SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொன்னமராவதி பகுதிகளில் ஒரேநாளில் 3 பள்ளிவாசல்களில் மின்சாதன பொருட்கள் திருட்டு

9/20/2019 12:09:03 AM

பொன்னமராவதி.செப்.20: பொன்னமராவதி பகுதிகளில் உள்ள மூன்று பள்ளிவாசல்களில் ஒரே நாளில் மின்சாதன பொருட்கள் மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருக்களம்பூரில் உள்ள பள்ளிவாசலில் உள்ள ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு ஆம்பிளிபயர், வேந்தன்பட்டியில் உள்ள பள்ளிவாசலில் ரூ.ஏழாயிரம் மதிப்புள்ள ஆம்பிளிபயர், பொன்னமராவதி பெருமாள் கோவில் வீதியில் உள்ள பள்ளிவாசலில் 11 பித்தளை தண்ணீர் பைப் என ஒரே நாளில் மூன்று பள்ளிவாசல்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது தொடர்பாக பொன்னமராவதி போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதே போல் இரண்டு மாதங்களுக்கு முன் பொன்னமராவதி அருகே உள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மருதிபட்டி, செல்லியம்பட்டி, கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களின் ஆம்பிபயர் திருட்டு போயுள்ளன. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீசார் கூறுகையில்- திருடிய நபர் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஒரே வாலிபர் என தெரியவந்துள்ளது. அடையாளம் தெரியாத அந்த வாலிபரை தேடி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்