இலவச லேப்டாப் வழங்காமல் புறக்கணிப்பு சப்-கலெக்டர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை
9/17/2019 1:11:45 AM
பொள்ளாச்சி, செப். 17: பொள்ளாச்சி அருகே உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, அரசின் இலவச லேப்டாப் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டதால், சப்-கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர். பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் பலரும், சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு கொடுத்தனர்.
அவர்கள் கொடுத்த மனுவில், ‘சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலை பள்ளியில், கடந்த கல்வியாண்டில் 84 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 படித்து வந்தோம். ஆனால் எங்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச லேப்டாப் கிடைக்க பெறவில்லை. ஆனால், எங்களுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில்(2019-20) படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மாதம் 24ம் தேதியன்று, தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. எங்களில் பலர், பொறியியல் கல்லூரி, விவசாய கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரிகளில் படித்து வருவதால், எங்களின் மேற்படிப்பிற்கு லேப்டாப் தேவைப்படுகிறது. இந்நேரத்தில் லேப்டாப் வழங்கப்பட்டால் பெரும் உதவியாக இருக்கும். எனவே, சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த ஆண்டில் படித்த மாணவர்கள் அனைவருக்கும், தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தி.மு.க. மக்கள் கிராம சபை மூலம் 9 ஆண்டுகால தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு
போலி பேஸ்புக்கில் பணம் பறிக்கும் கும்பல்
சிறுமுகை விருட்ச பீடத்தில் இன்று கும்பாபிஷேக விழா
கோவையில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
கோவையில் தே.மு.தி.க. சார்பில் இன்று பொங்கல் விழா பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார்
மலைவாழ் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்