பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் ஆவணி பிரமோற்சவ திருக்கல்யாணம் ஏராளமானோர் பங்கேற்பு
9/15/2019 4:28:10 AM
பழநி, செப். 15: பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரமோற்சவ விழா திருக்கல்யாண நிகழ்ச்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி பிரமோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழா வரும் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு நடந்தது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத அகோபில வரதராஜ பெருமாளுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது.தொடர்ந்து பட்டாடை அணிவிக்கப்பட்டு பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அப்பளம் உடைத்தல், மாலை மாற்றுதல் போன்ற திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் போன்ற பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று (ஞாயிறு) இரவு பாரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கள்) காலை 9 மணிக்கு துலா லக்னத்தில் நடக்க உள்ளது. 17ம் தேதி இரவு கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி மாலை விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா நடைபெறும் 11 நாட்களும் கோயில் வளாகத்தில் பக்தி இன்னிசை, பக்திச் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பாசுரங்கள் சேவித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
மேலும் செய்திகள்
தொப்பம்பட்டி திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
பட்டிவீரன்பட்டி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ஒட்டன்சத்திரத்தில் கிரிக்கெட் போட்டி அர.சக்கரபாணி எம்எல்ஏ துவக்கி வைத்தார்
நாங்காஞ்சியாறு முழு கொள்ளளவை எட்டியது மலர்தூவி வரவேற்பு
சின்னாளபட்டியில் வீட்டு கூரையில் இருந்த 2 உடும்புகள் மீட்பு
ஆத்தூர் பகுதியில் மழையால் பாதித்தது மக்காசோள பயிர்கள் விவசாயிகள் கவலை
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்