நிலத்தடி நீர் குறைவதால் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தல் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தல்
9/10/2019 12:12:00 AM
காரைக்கால், செப். 10: காரைக்காலில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால் தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார். காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் உள்ள இளையான்குடி கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த ஆழ்குழாய்களில் நீர்வரத்து குறைவு மற்றும் பழுது காரணமாக, மாற்று இடத்தில் ஆழ்குழாய் அமைக்கும் பணியை மாவட்ட வேளாண் துறை தொடங்கியுள்ளது. இந்த பணியை, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் விக்ராந்த் ராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர், அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறும்போது, காரைக்கால் மாவட்டத்தில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, 100க்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகளை வெட்டி காவிரி நீர் மற்றும் பருவமழையின்போது கிடைக்கும் தண்ணீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் சிறப்புத் திட்டம் வகுத்து தூர்வாரி வருகிறது. மேலும், இப்பகுதியில் நிலத்தடியில் நீர் இருப்பின்மையால் மாற்று இடத்தில் குழாய் பதிப்பு செய்யப்படுகிறது. இதேபோன்ற குறைகள் உள்ள இடத்தில் ஆழ்குழாய் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, நிலத்தடி நீர் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தேவைக்கு மட்டும் நிலத்தடி நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.தொடர்ந்து, திருநள்ளாற்றை அடுத்த தென்னங்குடி சாலையோரத்தில் 360 குழி நில அளவில் நடைபெறும் குளம் வெட்டும் பணியை அமைச்சரும், கலெக்டரும் நேரில் பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினர்.
மேலும் செய்திகள்
பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்ட புதுச்சேரி செவிலியர் நெகிழ்ச்சி
டெல்லி கலவரத்துக்கு மத்திய ஆட்சியாளர்களே காரணம்
எம்ஐடி கல்லூரியில் எக்ஸலன்ஸ் பயிற்சி மையம் திறப்பு விழா
பறவைகளை விற்கும் குறவர்கள் வனத்துறை தீவிர கண்காணிப்பு
மரத்தில் லாரி மோதி ஓட்டுநர் பலி
முருங்கப்பாக்கம் முதல் சிவாஜி சிலை வரை ₹300 கோடியில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க மத்திய அமைச்சர் ஒப்புதல்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்