குடியிருப்புகள், வணிக கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம் அமைக்க வேண்டும் மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்
8/22/2019 7:20:36 AM
திருச்சி, ஆக.22: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ரங்கம் கோட்டம் வடக்கு அடையவளஞ்சான் தெரு அடுக்குமாடி குடியிருப்பில் 99 வீடுகள், கிழக்கு அடையவளஞ்சான் தெரு அடுக்குமாடி குடியிருப்பில் 40 வீடுகளில் மேற்கூரையில் உள்ள மழைநீரை கினறு அமைத்து மழைநீரை சேமிப்பதை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளதா எனக் கணக்கெடுக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைத்து வீடுகளிலும் கட்டயமாக அமைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பருவ மழை தொடங்கும் முன் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்யவும், இல்லாத கட்டடங்களில் உடனடியாக அவற்றை அமைக்கவும், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும், எதிர்வரும் பருவமழையால் கிடைக்கும் மழைநீரைச் சேமிக்கவும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைப் போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தும் விதமாக, அனைத்து கட்டிட உரிமையாளர்களுக்கும் மாநகராட்சி மூலம் கடிதம் அனுப்பபட்டுள்ளது என ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
அனுமந்த வாகனத்தில் நம்பெருமாள் வீதிஉலா திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
திருச்சி தீரன்நகரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு
அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு நாளை அஞ்சலி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அழைப்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக
வெவ்வேறு இடங்களில் திருமணமான 2 பெண்கள் மாயம்
தனிப்படை போலீசை வெட்டிய வாலிபர் நீதிமன்றத்தில் சரண்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!