மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்றவருக்கு ஆயுள்
8/22/2019 6:49:52 AM
திருவில்லிபுத்தூர், ஆக.22: மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவேங்கடத்தில் உள்ள கீழத்தெரு காலனியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சந்திரமோகன், கடந்த 2010 அக்.7ல் பெருமாளை வெட்டிப் படுகொலை செய்தார். பெருமாள் மனைவி பொன்னுத்தாய் புகாரின்பேரில், மாரனேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்த வழக்கு, திருவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா, ‘பெருமாளைக் கொன்ற சந்திரமோகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அதை கட்ட தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’ என தீர்ப்பளித்தார்.
மேலும் செய்திகள்
அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
விருதுநகரில் 72வது குடியரசு தினவிழா கோலாகலம் கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டியது
திருச்சுழியில் குடியரசு தினவிழா
சிவகாசியில் குடியரசு தினவிழா
திருவில்லி.யில் டிராக்டர் பேரணி முன்னாள் எம்பி போட்டி
லாரி மோதி வாலிபர் பலி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!