ஆண்டிபட்டியில் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்
8/22/2019 6:46:23 AM
ஆண்டிபட்டி, ஆக. 22: ஆண்டிபட்டியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டியில் நேற்று காலை தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆண்டிபட்டி தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்டிப்பட்டி தாலுகா தலைவர் பிரவீந்திரன் தலைமை வகித்தார். அந்தோணி, வாய்க்கால் துறை ஆகியோர் முன்னிலை வைத்தனர். தாலுகா செயலாளர் கோபால் துவக்க உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் செல்வம் நிறைவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சொந்த வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு குடியிருக்க இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். 60 வயதான முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோருக்கான நிதியுதவி வழங்குவதில் இடைத்தரகர்களை ஒழித்து லஞ்சம் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு கோதுமை சீனி ஆகிய பொருட்களை எடை குறைவாக நிறுத்து, பொருட்களை மிச்சப்படுத்தி வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஊர்வலமாக ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று துணை வட்டாட்சியர் பாண்டியனிடம் மனுக்களை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
உத்தமபாளையம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தம்
மதுரைக்கு மாற்று தண்ணீர் திட்டம் கோரி கூடலூரில் கவன ஈர்ப்பு பேரணி
10 மாதங்களுக்கு பின் சுருளி அருவி திறப்பு குளிக்க தடை நீடிப்பால் ஏமாற்றம்
மானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்
சின்னமனூர் அருகே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்