வதிலை கல்லூரி அனுமதிக்கு மனு
8/22/2019 2:03:47 AM
வத்தலக்குண்டு, ஆக. 22: வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் குறைவாகவே மாணவர்கள் உள்ளனர். இவர்கள் 30க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கொண்ட பழைய ஆங்கிலேயர் காலத்து எச் வடிவ 2 மாடி கட்டிடத்தில் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில்
புதிதாக கட்டப்பட்ட 30 வகுப்பறைகள் கொண்ட 3 மாடி கட்டிடமும் உள்ளது. இந்த இரு கட்டிடமும் தனித்தனியே 300 அடி இடைவெளியில் உள்ளது. ஆகையால் ஆங்கிலேயர் கால கட்டிடத்தில் நடக்கும் பள்ளியை புதிய கட்டிடத்திற்கு மாற்றி விட்டு இந்த கட்டிடத்தில் அரசு இருபாலர் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரி அரசு கல்லூரி அமைப்பு கமிட்டி ஏற்படுத்தினர்.
இந்த அமைப்பினர் நேற்று, வத்தலக்குண்டுவில் அரசு இருபாலர் கல்லூரி அமைக்க அரசிடம் அனுமதி பெற்று தர கோரி நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழியிடம் மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி அமைப்பு கமிட்டி தலைவர் ராஜா, செயலாளர் கோபால், பொருளாளர் கென்னடி, துணை தலைவர் பால்ராஜ், ஒருங்கிணைப்பாளர் சூரியமூர்த்தி, நிர்வாகிகள் மோகன், மருதராஜன், ராஜேந்திரன், வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மனுவை பெற்ற எம்எல்ஏ வத்தலக்குண்டு அரசு ஆண்கள் பள்ளியை நேரில் வந்து ஆய்வு செய்த பின் அரசு அனுமதி பெற்று தருவதாக கூறினார்.
மேலும் செய்திகள்
குடியரசு தின விழா கோலாகல ெகாண்டாட்டம்
வாக்காளர் பட்டியலில் கூட இந்தி திணிப்பு ஐ.பெரியசாமி எம்எல்ஏ ஆதங்கம்
பேஸ்புக்கில் விஷம பிரச்சாரம் பழநியில் இந்து முன்னணி நிர்வாகி மீது புகார்
தைப்பூச திருவிழா நாளை முதல் போலீஸ் கட்டுப்பாட்டில் பழநி நகரம்
கொடைக்கானல் பேரிஜம் ஏரி 10 மாதமா மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கொடைக்கானலில் வாக்காளர் தின விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!