தொட்டபெட்டா செல்ல தடையால் சிறு வியாபாரிகள் அவதி
8/22/2019 1:55:54 AM
ஊட்டி, ஆக. 22: தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு மாதங்களுக்கு மேலாக கடைகளை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு வரும் சிறு வியாபாரிகள். ஊட்டி அருேகயுள்ள தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்திருந்த நிலையில், இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன்படி ரூ.1.6 கோடி செலவில் கடந்த மே மாதம் இச்சாலை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டது. சாலை சீரமைப்பு பணிகள் முடிந்து இரு மாதங்கள் ஆகியும் இச்சாலையை திறக்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.
அமைச்சர் வருகைக்காக காத்திருக்கும் இச்சாலையால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டள்ளது. கடந்த இரு மாதங்களாக தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு கடை வைத்துள்ள சிறு வியாபாரிகள் கடும் அவதிப்படுகின்றனர். கடலை, தொப்பி, மாங்காய் போன்ற சிறு வியாபாரிகள் இரு மாதங்களாக பிழைப்பு இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, இங்குள்ள சிறு வியாபாரிகள் நலன் கருதி இரண்டாம் சீசன் துவங்கும் முன் தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
காவல்துறை சார்பில் பழங்குடியின கிராமங்களில் குறை தீர்க்கும் கூட்டம்
பராமரிப்பு பணிக்காக தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்
குன்னூரில் சினிமா படப்பிடிப்புகள் துவக்கம்
அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பாலம் கட்டும் பணி காரணமாக தலைகுந்தாவில் மாற்றுப்பாதை அமைப்பு
10 பேருக்கு கொரோனா
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!