ராஜிவ்காந்தி பிறந்தநாள் விழா
8/22/2019 1:48:26 AM
ஈரோடு, ஆக. 22: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பிறந்தநாள் விழா ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளர் மணிகண்டன் கலந்து கொண்டு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர்கள் ராஜேஷ்ராஜப்பா, செல்லகுமாரசாமி, மண்டல தலைவர்கள் அயூப்அலி, திருச்செல்வம், ஜாபர்சாதிக், வட்டார தலைவர் நடராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கண்ணப்பன், மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் கட்சி சார்பில் ராஜிவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
இதேபோல, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மேயருமான காலனி வெங்கடாசலம் சென்னிமலை பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராஜிவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ராஜிவ்காந்தியின் ஆளுமை என்ற தலைப்பில் கட்டுரை போட்டி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி இன்று ஈரோடு மாவட்டம் வருகை
ஈரோட்டில் 27 பேருக்கு கொரோனா
சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றம்
மாவட்டத்தில் 13 மையங்களில் இன்று ஊரக திறனாய்வு தேர்வு
அந்தியூரில் வி.சி.க. சார்பில் வேளாண் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பெருந்துறை தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!