ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்
8/22/2019 1:38:41 AM
நாமக்கல், ஆக.22: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆசியாமரியம் தலைமை வகித்து, குடும்ப ஓய்வூதியம் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க கோருதல், விடுப்பில் சென்ற நாட்களை முறைப்படுத்த வேண்டும். பணி காலத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியம் மற்றும் இதர பணப் பயன்கள், சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 46 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் இளங்கோவன், துணை இயக்குநர்கள் வேலாயுதம், மதிவாணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், நந்தகுமார், நாமக்கல் மாவட்ட கருவூல அலுவலர் சுப்புலட்சுமி, பயிற்சி துணை கலெக்டர் பிரேமலதா, அரசுத்துறை அலுவலர்கள், ஓய்வூதியர்கள், ஓய்வூதிய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
நாமக்கல் ஒன்றியத்தில் ஆட்டு கொட்டாய் கட்டும் திட்டத்தில் முறைகேடு
பழையபாளையம் ஏரியில் இரை தேடி குவிந்த கொக்கு, நாரைகள்
திருச்செங்கோட்டில் 450 மூட்டை மஞ்சள் 15 லட்சத்திற்கு ஏலம்
தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் விவேகானந்தா வித்யா பவன் மாணவிகள் தேர்வு
தாய், மகள் மாயம்
திமுக மக்கள் கிராம சபை கூட்டம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!