வாய்க்கால், ஏரி, குளங்களை தூர்வாரி கடைமடை வரை முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் அனைத்து கட்சிகள் மனு
8/22/2019 12:14:09 AM
பட்டுக்கோட்டை, ஆக. 22: பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் உள்ள வாய்க்கால், ஏரி, குளங்களை தூர்வாரி கடைமடை வரை முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டுமென சார் ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர், விவசாய அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஸ்பராஜிடம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளை சேர்ந்த அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் மேட்டூர் அணை முழு கொள்ளளவு நிரம்பி வரும் நேரத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகா பகுதிகளில் உள்ள கல்லணை கால்வாய் சிஎம்பி வாய்க்கால்கள் மற்றும் ஏரி, குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி கடைமடை வரைக்கும் முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும்.
அனைத்து ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிரப்ப வேண்டும். வேதபுரி, வெண்டாக்கோட்டை அணைகளையும் மற்றும் தடுப்பணைகளையும் பராமரித்து பாசனத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கஜா புயலில் விழுந்த மரங்கள் சிஎம்பி வாய்க்கால் மற்றும் ஏரி, குளங்களில் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. அதை உடனடியாக அகற்றி கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட பணிகளை அரசு பணியாளர்களும், அந்த பகுதி விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்களோடு இணைந்து செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.கஜா புயலில் விழுந்த மரங்கள் சிஎம்பி வாய்க்கால் மற்றும் ஏரி, குளங்களில் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. அதை உடனடியாக அகற்றி கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தடை மீறி பேரணி போலீசாருடன் விவசாயிகள் தள்ளுமுள்ளு
தஞ்சையில் பதற்றம் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக திமுகவினர் சாலை
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்
தஞ்சையில் தம்பி விலாஸ், சமுத்ரா ஹால் திறப்பு விழா
மகாநந்திக்கு பால் அபிஷேகம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 4 பேர் கைது
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!