கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
8/20/2019 12:58:57 AM
ஓசூர், ஆக.20: கர்நாடகாவில் மழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து 808 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 41.49 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 568 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 808 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, 3 மதகுகள் வழியாக இந்த நீர் அப்படியே ஆற்றில் திறக்கப்படுகிறது. இதனால் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி, அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கால்வாய் அமைக்க வழங்கிய நிலத்திற்கு இழப்பீடு கேட்டு 150வது முறையாக விவசாயிகள் மனு'
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
சாலை பாதுகாப்பு விழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
கோட்டூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
உலக சிக்கன நாள் விழாவில் மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!