கும்மிடிப்பூண்டி அருகே ரேஷன் கடையை இடமாற்றக்கோரி மறியல்
8/20/2019 12:19:34 AM
கும்மிடிப்பூண்டி, ஆக. 20: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு, மேட்டு தெரு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இந்தப் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இருந்து வாங்கி வருகின்றனர். இந்த கடை சுமார் பத்து வருடங்களாக தனியார் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது கட்டிடத்தின் உரிமையாளர், ரேஷன் கடைக்கு சென்றுவந்த வழியை மாற்றியுள்ளார். இதனால் சாலையோரமாக நின்று பொருட்களை வாங்கவேண்டியது உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மேட்டுத் தெருவில் இருந்து பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மறியலில் இந்த ரேஷன் கடை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். நீண்ட நாளாக வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. இதனால் அரசுக்கு வருடந்தோறும் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரேஷன் கடை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் மனு கொடுங்கள். அந்த மனுவை பரிசீலனை செய்த பிறகு அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்வர் என அறிவுரை வழங்கினர். அதை ஏற்ற மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
கோயிலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
ஆதார் திருத்த சிறப்பு முகாம்
திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகள்: சீரமைக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் மனு
திருவள்ளூர் ஆர்டிஓ அலுவலகத்தில் உருக்குலைந்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
திருமணம் ஆகாத ஏக்கம் இளம்பெண் தற்கொலை
கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!