தலைவன்கோட்டை அருகே கொல்லி ஆற்றில் பாலம் கட்டும் பணியால் குடிநீர் குழாய் துண்டிப்பு
8/14/2019 12:23:49 AM
நெல்லை, ஆக. 14: தலைவன்கோட்டை அருகே கொல்லியாற்றில் பாலம் கட்டும் பணிக்காக குழி தோண்டிய போது குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 3 கிராமங்களில் குடிநீர் கிடைக்காததால் மக்கள் தவிக்கின்றனர். வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலைவன்கோட்டையில் கொல்லியாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தலைவன்கோட்டை ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் பூஜைபாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன், கொல்லி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரப்படும் என உறுதியளித்தார்.
தற்போது பாலம் கட்டுமான பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இவ்வாற்றின் குறுக்கே தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் பைப்லைன் செல்கிறது. பாலம் கட்டுமான பணிக்காக தோண்டிய போது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இதனால் கடந்த 5 நாட்களாக பட்டக்குறிச்சி, அரியூர், பாறைப்பட்டி ஆகிய 3 கிராமங்களில் தண்ணீர் வரத்து தடைபட்டது. இதனால் இந்த கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி மாற்றுப்பாதையில் குழாய் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தென்காசியில் வர்த்தக சங்க பொதுக்குழு
மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு
வள்ளியூரில் நேதாஜி பிறந்த நாள் விழா
தீயணைப்பு புதிய செயலி தென்காசியில் அறிமுகம்
நாங்குநேரியில் மாநில செயற்குழு கூட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்அமல்படுத்த வேண்டும்
திசையன்விளை தாலுகாவில் விழிப்புணர்வு கோலப் போட்டி
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!