மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 4,444 வாக்குப்பதிவு இயந்திரங்களை மகாராஷ்டிராவுக்கு அனுப்பும் பணி தீவிரம்
8/14/2019 12:15:18 AM
திருவள்ளூர், ஆக. 14: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதியும் நடந்தது. திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டும், அந்தந்த பகுதிகளில் உள்ள கிடங்குகளில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்து, 45 நாட்கள் வரை தேர்தல் தொடர்பாக யாரும் வழக்கு தொடரவில்லை. எனவே, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு விபரங்களை அழித்துவிட்டு, அவற்றை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
அதைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, மாதவரம் ஆகிய பகுதிகளில், அரசு கிடங்குகளில் வைத்திருந்த 4,444 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்) மற்றும் 2,222 ஒப்புகை ரசீது இயந்திரங்கள் (விவிபேட்) ஆகியவை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அனுப்பும் பணி இரு நாட்களாக நடந்துவருகிறது. அதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு விபரங்கள் அழிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது. திருவள்ளூரில் தேர்தல் பிரிவு தாசில்தார் சீனிவாசன் தலைமையில் 50 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.
மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை விமான நிலையத்தில் எலக்ட்ரீஷியன் கைது
பூந்தமல்லிக்கு வரும் 31ம் தேதி ஸ்டாலின் வருகை
குடியரசு தினவிழா கொண்டாட்டம் 1.76 கோடி நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்
ரயில் மோதி இருவர் பலி
25 சண்டை கோழிகள் திருட்டு
பெரியபாளையம் காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!