மூதாட்டியிடம் நூதன முறையில் வங்கி பணம் அபேஸ்
8/11/2019 1:39:46 AM
வைகுண்டம், ஆக. 11: மூதாட்டியிடம் வங்கி பணத்தை மர்மநபர் நூதனமாக அபேஸ் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வைகுண்டம் அடுத்த பொன்னன்குறிச்சி தெற்குத் தெருவை சேர்ந்த காசி மனைவி ஆறுமுகத்தாய், தூத்துக்குடி எஸ்பியிடம் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எழுத படிக்கத் தெரியாத நான் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவள். எனக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். எனது மகளுக்கு திருமணமாகி விட்டது. கோவையில் கூலி வேலை பார்த்து வரும் எனது மகனின் திருமணத்திற்காக வைகுண்டத்தில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கணக்கு துவங்கி எனது மகன் மாதம்தோறும் அனுப்பிய தொகையை சேமித்து வந்தேன். அந்த வகையில் வங்கிக் கணக்கில் ரூ.70 ஆயிரம் வரை சேமித்து வைத்திருந்த நிலையில், கடந்த பொங்கல் பண்டிகையின்போது மகளுக்கு பொங்கல்படி கொடுப்பதற்காக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கச் சென்றேன். இதற்காக ஏடிஎம் மையத்தில் எனது ஏடிஎம் கார்டை செலுத்தியபோது பணம் இல்லை என வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான், வங்கிக்கிளையில் சென்று கேட்டபோது எனது வங்கிக் கணக்கை மர்மநபர் மோசடியாக பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கி அபேஸ் செய்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வைகுண்டம் போலீசிலும், பின்னர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவிலும் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. வங்கியில் நான் பெற்ற ஸ்டேட்மென்டை பார்க்கும்போது மர்மநபர் ஒருவர் ஆன்லைன் மூலமாக எனது வங்கிக்கணக்கை பயன்படுத்தி இதுவரை 65 பொருட்கள் வாங்கியுள்ளது தெரியவருகிறது. எனவே, இதுவிஷயத்தில் கவனம் செலுத்தி உண்மை குற்றவாளியை துரிதமாக கைது செய்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டுகிறேன் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தினவிழா
விவசாயிகளுக்கு ஆதரவாக ஆத்தூரில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தமிழகத்தை பாதுகாக்க ஆட்சி மாற்றம் வேண்டும் கீதாஜீவன் எம்எல்ஏ பேச்சு ஆறுமுகநேரியில் பெண்களுக்கு சேலை வழங்கல்
டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக கோவில்பட்டியில் விவசாயிகள் வாகன பேரணி, ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு
முதலூரில் சிசிடிவி கேமரா அமைக்கும் பணி துவக்கம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!