வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு செந்நாய் கடித்ததா? என விசாரணை
3/19/2023 2:16:22 AM
சேலம், மார்ச் 19: சேலத்தில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் அழகாபுரம் அடுத்த பெரியபுதூர் கணபதி நகரைச் சேர்ந்தவர் நஞ்சப்பன் (67). விவசாயியான இவர், வீட்டில் 10 ஆடு மற்றும் 6 மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற இவர், இரவு வீட்டின் அருகே கட்டி வைத்துள்ளார். தொடர்ந்து நேற்று காலை, பால் கறப்பதற்காக மாட்டு தொழுவத்திற்கு சென்றார். அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 10 ஆடுகளும், வயிற்றில் கடிக்கப்பட்டு குடல் வெளியே வந்தபடி இறந்து கிடந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த நஞ்சப்பன், இதுகுறித்து அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார்.
இரவில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை, தெருநாய்கள் கடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், அனைத்து ஆடுகளும் வயிற்றிலேயே கடிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதால், இதற்கு செந்நாய் கூட காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முன்பு அதேபகுதியில் ஒருசில வீடுகளில் கட்டியிருந்த மாடுகளும், இதேபோல் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அப்பகுதியினர் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, அப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து வனத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1200 கனஅடி
சேலம் கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி
18 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
வாடகை செலுத்தாத 14 கடைக்கு சீல் வைப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!