மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர்களுக்கு பயிற்சி
3/18/2023 5:53:45 AM
மேலூர் / உசிலம்பட்டி, மார்ச் 18: மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி, நேற்று மேலூர் வட்டார வள மையத்தில் உள்ளடங்கிய கல்வி திட்ட முன் தொடக்கநிலை, தொடக்கநிலை, மற்றும் இடை நிலையில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைளை கையாள்வது ெதாடர்பாக அவர்களின் பெற்றோர், பாதுகாவலர் மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வட்டார கல்வி அலுவலர்கள் அழகுமீனா, ஜெயசித்ரா தலைமை வகித்தனர். சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள் கலந்து கொண்டு, தொடக்க நிலையிலேயே மருத்துவரிடம் குழந்தையை அழைத்து செல்வதன் வழியாகவும், முறையான பயிற்சி வழங்குவதன் மூலமாகவும் குறைபாடுகளை தவிர்க்க முடியும் என எடுத்துரைத்தனர்.
இதேபோல் உசிலம்பட்டியில் நடந்த பயிற்சி முகாமிற்கு வட்டார கல்வி அலுவலர் திலகவதி தலைமை தாங்கினார். வட்டாரவள மைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) நளினி முன்னிலை வகித்தார். மாவட்ட கூடுதல் திட்ட இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சரவணன் பயிற்சிகளை நேரில் பார்வையிட்டார். மாற்றுத்திறனாளி மாணவர்களை முதல்நிலையில் கண்டறிவது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
திருமங்கலம் டிராபிக் ஸ்டேசனில் டூவீலர்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை
மதுரையில் கீழே விழுந்த சலவை தொழிலாளி பலி
மாநில கபடி போட்டியில் மைக்குடி அணி வெற்றி
மாவட்ட அளவிலான செஸ் போட்டி வல்லாளபட்டி, செட்டியார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
நாகமலை புதுக்கோட்டையில் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
முதல்வர் பிறந்தநாள் விழாவையொட்டி மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் கோலாகலம் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!