சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
3/18/2023 5:52:33 AM
மேட்டுப்பாளையம், மார்ச் 18:தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு துணைத்தலைவர் சித்திக் தலைமை வகித்தார். சங்க பொறுப்பாளர்கள் சாமுவேல், காளீஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், சிஐடியு மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மேட்டுப்பாளையம் பொதுத்தொழிலாளர் சங்க நிர்வாகி பாஷா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, குடிநீர் வடிகால் வாரிய சங்க பொறுப்பாளர் சசிகுமார், பொதுத்தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் அப்துல்சமது ஷாநவாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து வரும் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் செய்திகள்
கோவை வடக்கு மாவட்ட காங். தர்ணா போராட்டம்
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் பொகலூரில் கொடியேற்று நிகழ்ச்சி
மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா
காரமடை எஸ்விஜிவி பள்ளியில் விளையாட்டு விழா
சிறுமுகை ஸ்ரீஅம்பாள் பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!