லங்கா கார்னர் பாலத்தின் ரயில்வே தடுப்பு கம்பி உடைந்தது: அரசு பஸ் கண்ணாடி சேதம்
3/18/2023 5:52:22 AM
கோவை, மார்ச் 18: கோவை அரசு மருத்துவமனை அருகே லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் தடுப்பு இரும்பு கம்பி உடைந்து விழுந்ததில் அரசு பஸ் கண்ணாடி சேதமடைந்தது. கோவை அரசு மருத்துவமனையில் இருந்து டவுன்ஹால் செல்லும் வழியில் லங்கா கார்னர் ரயில்வே சுரங்க பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்க பாதையில் அதிக உயரம் கொண்ட வாகனங்கள் கடந்து செல்ல முடியாது. இதனால், முன் கூட்டியே வாகனங்கள் நிறுத்த இரும்பு தடுப்பு சுரங்க பாதைக்கு முன்னதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல அவ்வழியாக சென்ற அரசு பேருந்து தடுப்பை கடந்து சென்றபோது, பேருந்தின் மேல் பகுதியில் வைத்திருந்த ஸ்டெப்னி டயர் இரும்பு தடுப்பு மீது மோதியது. இதனால், இரும்பு தடுப்பு உடைந்து பேருந்தின் மீது விழுந்தது. இதில் பேருந்தின் பின் பக்க கண்ணாடி நொறுங்கியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் இரும்பு தடுப்பை அகற்றும் பணிகளை மேற்கொண்டு சரி செய்தனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
கோவை வடக்கு மாவட்ட காங். தர்ணா போராட்டம்
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் பொகலூரில் கொடியேற்று நிகழ்ச்சி
மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா
காரமடை எஸ்விஜிவி பள்ளியில் விளையாட்டு விழா
சிறுமுகை ஸ்ரீஅம்பாள் பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!