கோவை அரசு மருத்துவமனையில் பிறவி இதய கோளாறால் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கு அதிநவீன சிகிச்சை
3/18/2023 5:52:08 AM
கோவை, மார்ச் 18: கோவை அரசு மருத்துவமனையில் பிறவி இதய கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கு அவர்களின் இதய சுவர்களில் உள்ள ஓட்டைகள் அதிநவீன வடிகுழாய் சிகிச்சையின் மூலம் சரிசெய்யப்பட்டது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதயவியல் துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறையின் மூலம் 6 பேருக்கு பிறவி இதய குறைபாடான இதய சுவர்களில் உள்ள ஓட்டைகள் அதிநவீன வடிகுழாய் சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை நல இருதயவியல் நிபுணர் மற்றும் துறைத்தலைவர் டாக்டர் முத்துக்குமரன், கோவை மருத்துவக்கல்லூரி இதயவியல் துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியர்கள் செய்தனர்.
இதில், 3 குழந்தைகளுக்கு இதய மேலறை இடைத்துளை சிகிச்சையும், ஒரு குழந்தைக்கு இதய கீழ் அறை பிரிசுவர்த்துளை சிகிச்சையும், இரண்டு குழந்தைகளுக்கு நிலைத்த நாளத்தமணி குறைபாடுகள் அதிநவீன வடிகுழாய் முறையின் மூலம் சரிசெய்யப்பட்டது. இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2.5 லட்சம் குழந்தைகள் இதய குறைபாடு பிரச்னையில் பிறக்கின்றன. இவர்களில் ஐந்தில் ஒரு குழந்தை கடுமையான இதய நோயால் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற இதய நோய் குறைபாடுகளை தேசிய குழந்தை நலத்திட்டம் (ஆர்பிஎஸ்கே) மூலம் முதற்கட்ட பரிசோதனையில் கண்டறிந்து, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற பாதிப்புகளுக்கு திறந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். ஆனால், தற்போது வடிகுழாய் சிகிச்சை மூலம் 45 நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையின் இதயவியல் துறை குழுவினர், அப்போலோ மருத்துவர்களுடன் இணைந்து 6 பேருக்கு அதிநவீன சிகிச்சை அளித்துள்ளனர். இது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடந்தது. தனியார் மருத்துவமனைகளில் வடிகுழாய் சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும். கோவை அரசு மருத்துவமனையில் 6 நோயாளிகளுக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
கோவை வடக்கு மாவட்ட காங். தர்ணா போராட்டம்
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் பொகலூரில் கொடியேற்று நிகழ்ச்சி
மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா
காரமடை எஸ்விஜிவி பள்ளியில் விளையாட்டு விழா
சிறுமுகை ஸ்ரீஅம்பாள் பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!