SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் மார்ச் 22ல் கிராம சபைக் கூட்டம்

3/18/2023 5:46:12 AM

திருச்சி, மார்ச்.18: உலக தண்ணீர் தினமான மார்ச்ச.22 அன்று திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தண்ணீர் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்க்கவும், மாற்றத்தினை துரிதப்படுத்தவும், வான் தரும் மழை நீரினை சேகாித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சரி செய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல், மறு சுழற்சிக்கு உட்படுத்துதல், நிலத்தடி நீரை சொிவூட்டல், நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுபாட்டைத் தடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தல், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல், நீர் நிலைகளுக்கு தண்ணீர் சென்று சேரும் கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல், நீரின் முக்கியத்துவத்தை அனைவருக்கம் எடுத்துக் கூறுதல்,

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை கிராம சபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுக்கான அனைத்து கிராம அண்ணா மறுமலார்ச்சி திட்டம்-2ன் கீழ் ஊராட்சிகளில் தோ்வு செய்யப்பட்ட நீர் நிலை பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள நீர்நிலை பணிகள் குறித்து விவாதித்தல் ஊரக பகுதிகளில் அரசு மற்றும் தனியார் சார்ந்த கட்டிடங்களில் மழைநீர் சேகாிப்பு அமைப்பு பணிகளை உருவாக்குதல், 2023-24 கிராம வளா்ச்சித் திட்டம் (விபிடிபி ) இறுதி செய்யப்பட்ட அறிக்கையினை வாசித்து காண்ப்பித்தல்.

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் (ஊரகம்) தனிநபர் சுகாதாரம் மற்றும் சுற்றுபுற தூய்மைக்கான விழிப்புணா்வு ஏற்படுத்துதல் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100% குடிநீர் வழங்க ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றுதல் போன்றவை கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும். மார்ச்.22ம் தேதி காலை 11 மணிக்கு திருச்சி மாவட்டத்திலுள்ளஅனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடக்கும் கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்