கோயம்பேடு பகுதியில் திடீர் மழை: காய்கறி, பூ விற்பனை மந்தம்
3/18/2023 5:28:41 AM
அண்ணாநகர்: கோயம்பேடு சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பெய்த திடீர் மழையால், காய்கறி, பூ விற்பனை மந்தமாக நடைபெற்றது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் மதியம் 12 மணி வரை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் வேலைக்கு சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில், மழை காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கம்போல் வருகின்ற புறநகர் வியாபாரிகள் வருகை குறைந்தது.
இதனால், காய்கறி, பழம் மற்றும் பூக்கள் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டது. இதுகுறித்து காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் திடீரென பெய்த மழை காரணமாக காய்கறி, பழம், பூ வாங்க புறநகர் வியாபாரிகள் குறைந்த அளவில் வந்தனர். இதனால் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டது’’ என்றார்.
மேலும் செய்திகள்
நடைபாதை ஆக்கிரமிப்பு தடுக்க கல் தூண் தடுப்புகள்
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்டு ஓராண்டிற்குள் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர்பாபு உறுதி
போலி ரசீது தயாரித்து ரூ.18 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
நந்தம்பாக்கம் பகுதியில் ரூ.26.94 கோடியில் பாதாள சாக்கடை பணி: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
கூவம் ஆற்றுப்படுகை, மெரினாவில் ரூ.2.20 கோடியில் கேமரா: பட்ஜெட்டில் அறிவிப்பு
கேட்பாரற்று நிறுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!