முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சிகரெட்டில் சூடு வைத்து சித்ரவதை: தாய், 2வது கணவன் கைது
10/1/2022 5:43:02 AM
வேளச்சேரி, அக்.1: அடையாறு சாஸ்திரி நகர், 7வது லேன் பகுதியை சேர்ந்தவர் கன்னியம்மா. இவரது மகள் பானு (28). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விமல்ராஜ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஏஞ்சல் என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, பானு கடந்த ஒரு ஆண்டாக கணவர் விமல்ராஜை பிரிந்து, அதேபகுதியில் வசித்து வருகிறார். இதனிடையே, அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகனுடன், பானுவுக்கு நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பானு தனது குழந்தை ஏஞ்சலுடன் ஜெகன் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பானு கன்னியம்மாவுக்கு போன் செய்து குழந்தை ஏஞ்சலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இதையடுத்து, கன்னியம்மா பானு வீட்டுக்கு சென்று குழந்தையை பார்த்தார். அப்போது குழந்தை ஏஞ்சல் முகத்தில் காயம், சூடு வைத்த தழும்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், இதுகுறித்து கன்னியம்மாவிடம் விசாரணை நடத்தினர். பானு தனது 2வது கணவர் ஜெகனுடன் சேர்ந்து அடித்து, சிகரெட்டால் சூடுவைத்து துன்புறுத்தியது தெரியவந்தது. பானு, ஜெகன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
மதுராந்தகம் பகுதியில் வேளாண் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு
இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் தகவல்
சிறார் மன்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: தாம்பரம் கமிஷனர் வழங்கினார்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
சந்தோஷி கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்: டிஎஸ்பி பங்கேற்பு
பெரும்புதூரில் பூட்டியே கிடக்கும் ராமானுஜர் மணி மண்டபம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!