வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, ₹40 ஆயிரம் திருட்டு
10/1/2022 5:41:10 AM
விருத்தாசலம், அக். 1: விருத்தாசலம் அருகே உள்ள தொரவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் மனைவி லட்சுமி (39). இவர் நேற்று முன் தினம் இரவு அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இரவு அங்கேயே தூங்கிவிட்டு நேற்று காலை தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
போலி சாதி சான்றிதழ் பெற்ற ஒன்றியக்குழு தலைவரை கைது செய்ய வேண்டும்
விருத்தாசலம் அருகே ஆபாச பேச்சு: வாலிபர் கைது
பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புரோக்கர் கைது
பழைய இரும்பு கடையில் 60 ஆயிரம் பணம் திருடியவர் அதிரடி கைது
கொலை செய்து புதைக்கப்பட்ட கல்லூரி மாணவனின் உடல் தோண்டி எடுப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!