SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணன்குப்பத்தில் மனுநீதி நாள் முகாம் 1,234 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

10/1/2022 5:40:43 AM

குறிஞ்சிப்பாடி, அக். 1: குறிஞ்சிப்பாடி அடுத்த கிருஷ்ணன்குப்பம் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமிற்கு மாவட்ட ஆட்சியர்  பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.  கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் முன்னிலை வகித்தார். கோட்டாட்சியர் அதியமான் கவியரசு வரவேற்றார். வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, 1,234 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே  54 லட்சத்து  53 ஆயிரத்து  259 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, குழந்தை வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து, மகளிர் திட்டம் ஆகியவை  சார்பில் அமைக்கப்பட்டிருந்த  கண்காட்சியை பார்வையிட்டார். வேளாண்மை இணை இயக்குனர் ரவிச்சந்திரன்,  டிஎஸ்பி ராஜேந்திரன், வட்டாட்சியர் சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், சிவஞானசுந்தரம், ஒன்றிய செயலாளர் சிவக்குமார்,  பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மதிமுக ராமச்சந்திரன், மாவட்ட விவசாய சங்க தலைவர் குமரகுரு, மகளிர் திட்ட குறிஞ்சிப்பாடி ஒன்றிய மேலாளர் சத்யநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகம்,  ராமச்சந்திரன்,  கண்ணகி பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்