காட்டுப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
10/1/2022 5:40:30 AM
பொன்னேரி, அக். 1: காட்டுப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த முகாமை காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் சேதுராமன் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் வினோதினி வினோத், ஊராட்சி செயலர் நாகஜோதி முன்னிலை வகித்தனர்.
முகாமில் பாடியநல்லூர் சங்கர நேத்ராலயா கண் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை. ரத்த அழுத்தம். சர்க்கரை நோய், இசிஜி உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த முகாமில் 220 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில், வார்டு உறுப்பினர்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள், இளைஞர்கள், மகளீர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
திருமணம் செய்வதாக சிறுமி கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது
பணம் கேட்டு தொழிலாளியை வெட்டிய பிரபல ரவுடி சிக்கினார்
பள்ளியில் விளையாடிய போது ₹10 நாணயத்தை விழுங்கிய சிறுவன்: மருத்துவமனையில் அனுமதி
மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு
முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் திமுக தெருமுனை கூட்டம்: அமைச்சர் நாசர் பங்கேற்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி