மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
10/1/2022 5:40:24 AM
திருவள்ளூர், அக்.1: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அசோகனை தலைமை தாங்கினார். நடப்பு சம்பா நெற்பயிருக்கு காப்பீடுத்தொகை கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் ரூ.1600 கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்தில் எதிர் வரும் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள ஏதுவாக நவம்பர் 15 க்குள் ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.497, பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்யுமாறும், பொதுசேவை மையங்களில் பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களுடைய பெயர், முகவரி, பயிரின் பெயர், பயிரிடப்பட்டுள்ள நிலம் உள்ள கிராமம்,
வங்கிக்கணக்கு எண், மற்றும் பயிரிடப்பட்டுள்ள பரப்பு ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்யுமாறும், இணையதளத்தில் பதிவு செய்த உடனே பதிவு செய்துள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என விவசாயிகள் தவறாது சம்மந்தப்பட்ட பொதுசேவை மைய முனைவோர்களிடம் உறுதி செய்து கொள்ளுமாறும் கூட்டத்தில் விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. நடப்பு சம்பா நெற்பயிருக்கு அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களுக்கான உத்திரவாத மகசூல் விவரத்தினை அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் விவசாயிகளுக்கு தெரியும் வண்ணம் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததினை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அறிவிப்பு பலகையில் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்படும்.
கடந்த 2021-22 ம் ஆண்டில் சாகுபடி செய்த சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கான இழப்பீடுத்தொகை எதிர் வரும் அக்டோபர் 2022 மாதத்திற்குள் அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர் முயற்சி எடுத்து வருகிறது. விவசாயிகள் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் அமைக்க கோரியதைத் தொடர்ந்த திருவள்ளுர் மாவட்டத்தில் காலியாக உள்ள அரசு புறம்போக்கு அனாதீன நிலங்களை விரைவில் தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதி வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், நடப்பு கொள்முதல் பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்த விவசாயிகளுக்கு இன்னும் ஒருவார காலத்திற்குள் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்;பு இயக்க திட்டத்தின் கீழ் மானிய விலையில் பாரம்பரிய நெல் இரக விதைகள் 2 விவசாயிகளுக்கும், கடந்த 30.12.2021 முதல் 02.01.2022 வரை பெய்த வடகிழக்கு பருவ கன மழையினால் 33 சதவீதத்திற்கு மேல் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணத்;தொகை ரூ.96930, 4 விவசாயிகளுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் ஜே.சேகர், வேளாண்மை உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு) அனிதா, விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஆவடி புத்தகத் திருவிழாவில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு: அமைச்சர், எம்பி, எம்எல்ஏ, கலெக்டர் பங்கேற்பு
இரும்பு ஜாக்கிகள் திருடிய 5 பேர் கைது
ஆந்திராவில் இருந்து 15 லிட்டர் சாராயம் கடத்தியவர் கைது
பொன்னேரியில் புதிதாக போடப்பட்ட சாலை 2 நாளில் சேதம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ரூ.621 கோடி மதிப்பீட்டில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் நான்கு வழி மேம்பாலம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
திருத்தணியில் மழை மரங்கள் சாய்ந்ததால் திணறும் மின்வாரிய ஊழியர்கள்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!