SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் வேளாண் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்

10/1/2022 5:37:20 AM

திருவாரூர்,அக்.1: திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் நாளை (2ம் தேதி) காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த, சாரா தொழில்கள் மற்றும் இதர தலைப்புகளில் விவாதிக்கப்படவுள்ளது.

கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப்பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்ற இருக்கும் நிலையில் அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு, தங்கள் ஊராட்சியின் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பையும் முழுமையாக வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வேளாண் உழவர் நலத்துறை திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்துரைக்கவும், திட்டம் குறித்து காட்சிப்படுத்திடவும்,

பயனாளிகளின் பட்டியலை பார்வைக்கு வைத்திடும் வகையிலும் மற்றும் பிரதம மந்திரி கிசான் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கும் வகையிலும் வேளாண் துறை அலுவலர்கள் தவறாமல் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் தொடர்ந்து நான்காவது வருடமாக குறுவை சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. தற்போது 2022ம் ஆண்டு 12635 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்