வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
10/1/2022 5:37:18 AM
தஞ்சாவூர் அக். 1: தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவாய் துறையில் பணியாற்றி வரும் 22 தாசில்தார்கள் துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவிடைமருதூரில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த ஜானகிராமன் பூதலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பூதலூரில் பணியாற்றி வந்த தாசில்தார் புண்ணியமூர்த்தி கும்பகோணம் நகர நிலவரித் திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். கும்பகோணத்தில் பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் திருவிடைமருதூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவிடைமருதூரில் பணியாற்றிய சித்ரா கும்பகோணம் கலால் மேற்பார்வை அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கும்பகோணத்தில் பணியாற்றிய கார்த்திகேயன் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் அரசு கேபிள் டிவி நிறுவன தனி தாசில்தார் குமார் பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஆகவும், பாபநாசத்தில் பணியாற்றிவந்த சுஜாதா தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளராகவும், பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் ரீட்டா ஜெர்லின் கும்பகோணம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளனர்.
கும்பகோணத்தில் பணியாற்றிய இளம்வழுதி, ஒரத்தநாடு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், ஒரத்தநாட்டில் பணியாற்றிய தமிழ் ஜெயந்தி தஞ்சாவூர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலக துணை அலுவலராகவும், நாகை அழகு முத்திரை கட்டணம் தனி தாசில்தாராக பணிபுரிந்த கஜேந்திரன் தனி காலால் மேற்பார்வை அலுவலராகவும், நாகையில் பணியாற்றிய மலர் குழலி, பட்டுக்கோட்டை அழகு முத்திரைத்தாள் கட்டணத்தை ஆசிரியராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டையில் பணியாற்றி வந்த மல்லிகாதேவி, தஞ்சாவூர் கலால் அலுவலக மேலாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் பணியாற்றி வந்த சுரேஷ் ஒரத்தநாட்டிற்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஆக பணிபுரிந்து ஜெயலட்சுமி தஞ்சாவூர் சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் சத்திரம் நிர்வாக தனி படத்துக்காக சக்திவேல் தந்தை தாசில்தாராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தஞ்சாவூர் தாசில்தாராக பணியாற்றிய மணிகண்டன் நாகை அழகு முத்திரைத்தாள் கட்டண தனி தாசில்தாராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளர் வெங்கடேஸ்வரன் கும்பகோணம் தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் தாசில்தார் தங்க பிரபாகரன் தஞ்சாவூர் டாஸ்மார்க் நிறுவன உதவி மேலாளராக பணி மாறுதல் பெற்றுள்ளார். பேராவூரணி தாசில்தார் அலுவலக கூடுதல் தலைமை துணை தாசில்தார் சமத்துவ ராஜ் தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலக தலைமை உதவியாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தமாக 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஊஞ்சல் உற்சவம்
திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பார்க்க ஏதுவாக தனி இடம்
கும்பகோணத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற ஓய்வின்றி பாடுபட வேண்டும்
காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் 27வது பொதுக்குழு கூட்டம்
மாநகராட்சி மேயர் தகவல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் உலக காசநோய் தினம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!