ஒரு கட்டு ரூ.70 வரை விற்பனை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம்
10/1/2022 5:37:11 AM
தஞ்சாவூர், அக்.1: தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் வாக்காளர்கள் விருப்பத்தின் பேரில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணியில் பொது மக்களின் வசதிக்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2,305 வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களைக் கொண்டு ஆதார் எண் இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் கடந்த 11.09.2022 அன்று நடைபெற்றது.
அந்த சிறப்பு முகாமில் 1,41,214 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை படிவம் 68 -ல் பூர்த்தி செய்து வாக்குச்சாவடிகளிலுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் 50 சதவீதத்தினர் (9.5 லட்சம் வாக்காளர்கள்) ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர். இப்பணியில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், விடுபட்ட வாக்காளர்களின் வசதிக்காக காந்தி ஜெயந்தி நாளான நாளை (2ம் தேதி) சிறப்பு முகாம் (Special Camp) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மீண்டும் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் 68 வழங்க இயலாத வாக்காளர்கள் தங்களது ஆன்டிராய்டு மொபைலில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட Voters Helpline என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அவர்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஊஞ்சல் உற்சவம்
திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பார்க்க ஏதுவாக தனி இடம்
கும்பகோணத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற ஓய்வின்றி பாடுபட வேண்டும்
காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் 27வது பொதுக்குழு கூட்டம்
மாநகராட்சி மேயர் தகவல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் உலக காசநோய் தினம்
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!