SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூரில் இருந்து சேலத்திற்கு பொதுவிநியோக திட்டத்திற்கு 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு

10/1/2022 5:37:10 AM

திருவாரூர்,அக்.1: திருவாரூரிலிருந்து சேலம் மாவட்டத்தின் பொதுவிநியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி மூட்டைகள் ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டில் குறுவை மற்றும் சம்பா பருவத்தில் விவசாயிகளிடமிருந்து 7 லட்சத்து 65 ஆயிரம் மெ.டன் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இவைகளிலிருந்து தினந்தோறும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அரிசியாக அரைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காகவும் அரிசி மற்றும் நெல்கள் ரயில் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து சேலம் மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக 21 வேகன்களில் 1,250 டன் அரிசி மூட்டைகளை அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

  • asssss

    ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு

  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்