ஒரத்தநாடு இலவச மருத்துவ சிறப்பு முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு பரிசு
10/1/2022 5:36:57 AM
ஒரத்தநாடு, அக்.1: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த இலவச கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் வருமானம் மேம்பட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும் பட்டுக்கோட்டை கோட்ட கால்நடை பராமரிப்பு துறையும் இணைந்து மாபெரும் இலவச கால்நடை சிறப்பு சிகிச்சை முகாம் மற்றும் கால்நடை வளர்ப்பு, தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் நடத்தியது. முகாமை ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் நா. நர்மதா துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த இலவச கால்நடை சிகிச்சை முகாமில் மொத்தம் 1096 கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 63 கறவை மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டலும், 110 சினை பிடிக்காத கறவை மாடுகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதித்து சிறப்பு சிகிச்சையும், 5 கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மேலும் 55 கன்று குட்டிகள் மற்றும் 610 ஆடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் 5 நாய்கள், 2 பூனைகளுக்கு வெறிநோய்க்கடி தடுப்பூசி மற்றும் 1054 கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய்க்கு எதிரான தடுப்பூசியும் போடப்பட்டது.
மேலும், இம்முகாமில் பங்கு பெற்ற சிறந்த கறவை மாடுகள், கன்று குட்டிகள், நாய்கள் மற்றும் ஆடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமின் ஒரு பகுதியாக கால்நடை வளர்ப்பு தகவல் தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சி நடத்தப்பட்டது. தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் பால் மற்றும் இறைச்சி பொருட்கள் தயாரிப்பு பற்றிய செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. மேலும் உறுகாய்ப்புல் தயாரித்தல், அசோலா உற்பத்தி மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு பண்ணையாளர்களின் பண்ணைகளில் நடைமுறைப்படுத்த ஊக்குவிக்கப்பட்டது. மேலும் கால்நடைகள் மற்றும் கோழிகளில் ஏற்படும் நோய்களை தடுக்கும் மூலிகை மருத்துவம் பற்றி விளக்கங்கள் அளிக்கப்பட்டு, பண்ணையாளர்கள் மூலிகை தாவரங்களை பயிர் செய்வதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டு, அவர்களுடைய வருமானம் மேம்பட வழிவகுக்கப்பட்டது. இம்முகாமில் மனோரா ரோட்டரி சங்கம் எஸ் பி டி குதிரை ஏற்ற பயிற்சிப்பள்ளி மற்றும் பிரிலியன்ட் பள்ளியும் கலந்து கொண்டன.
மேலும் செய்திகள்
திருவையாறு அருகே எய்ட்ஸ் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
பங்குனி அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கதிராமங்கலம் அரசு பள்ளிக்கு கல்வி தளவாட பொருள் வழங்கல்
மாமல்லபுரத்தில் நடந்த போட்டியில் தமிழ் பல்கலைக் கழக மாணவர்களுக்கு பதக்கம்
துபாய் நாட்டில் சிக்கித்தவிக்கும் எனது தாயை மீட்டுத்தாருங்கள்
திருவையாறு அருகே பெண் மானபங்கம்: வாலிபர் கைது
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!