சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தீ விபத்து நகைகள், பூஜை பொருட்கள் சேதம்
10/1/2022 5:31:34 AM
சீர்காழி, அக்.1: சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தீப்பற்றி எரிந்ததில் அம்மன் கழுத்தில் இருந்த 2 தங்க தாலி குண்டுகள் உருகியது. மயிலாடுதுறை மாவட்டம். சீர்காழி, அருகே சட்டநாதபுரம், உப்பனாற்றங்கரையில் மங்கள சாமுண்டீஸ்வரி சமேத கருணாமூர்த்தி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். ஆனால் கோவில் முழுமையாக தீப்பிடித்து எரிந்து விட்டது. இதில் அம்மன் கழுத்திலிருந்த 4 தாலி குண்டுகளில் 2 தாலி குண்டுகள் உருகி விட்டது. மேலும் கோயிலிலிருந்த திருவிளக்கு, தாம்பாளம், தீபாராதனை கொத்து உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் ஆன்மீக புத்தகங்கள் சேதமடைந்துள்ளன. இக்கோயிலை சந்திரசேகர் சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். கோயில் தீப்பற்றி எரிந்ததை அறிந்த இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பக்தர்கள் கோயில் முன்பு திரண்டனர். கோயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா என்பது குறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை
வைத்தீஸ்வரன்கோயிலில் கார்த்திகை வழிபாடு பக்தர்கள் சுவாமி தரிசனம்
வேதாரண்யத்தில் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம்
90 பேருக்கு வழங்கல் விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட்
ஒன்றியக்குழு தலைவர் தகவல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி மனிதசங்கிலி ஜாக்டோ- ஜியோ போராட்டம்
நாகப்பட்டினம் / மயிலாடுதுறை இடைநிலை ஆசிரியருக்கு பாராட்டு நாகப்பட்டினம் ஒன்றியக்குழு கூட்டம் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!