மேலகரம் பள்ளியில் இலவச சைக்கிள்கள்
10/1/2022 5:22:17 AM
தென்காசி, அக். 1: தென்காசியை அடுத்த மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமை வகித்தார். திமுக பேரூர் செயலாளர் சுடலை, பேரூராட்சி துணை தலைவர் ஜீவானந்தம், கவுன்சிலர்கள் பூமா, மகேஸ்வரன், சிங்கத்துரை முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் துரை தொகுத்து வழங்கினார். விழாவில் பழனி நாடார் எம்எல்ஏ பங்கேற்று 70 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கல்யாணிசுந்தரம், நன்னை சுந்தர், பாலு, பூபதி, பகவதிராஜ், பட்டமுத்து, குருசாமி,
காங். வட்டார தலைவர் பெருமாள், பேரூர் தலைவர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி ஜோதிடர், நகர்மன்ற கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் பேரூர் தலைவர் முருகன், சுந்தரபாண்டியபுரம் முத்துவேல், பிரபாகரன், செண்பகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் ரெஜினா பானு நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்து முதியவர் பலி
தென்காசி ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிக்காக நூறாண்டு மரங்கள் வெட்டி அகற்றம்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பழவூரில் கண்களை கட்டிக் கொண்டு 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
கடையம் அருகே 20 யானைகள் மீண்டும் அட்டகாசம் எதிரொலி: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சோலார் மின்வேலி
உரம் வாங்க செல்லும் போது சாதியை கேட்கும் அவலம் நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் தருவதில் காலதாமதம் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி தென்காசி மாவட்டத்துக்கு ஏப்.5ல் உள்ளூர் விடுமுறை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி