SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.6.30 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

10/1/2022 3:01:22 AM

திருப்பூர்,அக். 1:உடுமலை அருகே ரூ.6.30 கோடி மதிப்பிலான 21.10 ஏக்கர் ஆக்கிமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். திருப்பூர் மாவட்டம்,  உடுமலை வட்டம் கொங்கல் நகரம் மாரியம்மன், விநாயகர் கோயிலுக்கு சொந்தமான புன்செய் நிலம் உள்ளூர்வாசிகள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், இந்த நிலத்தை மீட்க திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ஆக்கிரமிப்புதாரர்கள் தாமாகவே முன்வந்து நிலத்தை ஒப்படைத்தனர்.

இதன்படி கோயிலுக்கு சொந்தமான 21.10 ஏக்கர் புன்செய் நிலத்தை அறநிலையத்துறை துணை ஆணையர் செல்வராஜ் தலைமையில் சரக ஆய்வர் சுமதி, செயல் அலுவலர் அம்சவேணி மற்றும் திருக்ேகாயில் பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மீட்டனர். இந்த இடத்தின் மதிப்பு ரூ.6.30 கோடி ஆகும். இந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்