அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி: காங்கயம் அருகே துணிகரம்; ஒரே இரவில் 7 வீடுகளில் திருட்டு
10/1/2022 3:01:16 AM
காங்கயம்,அக். 1:காங்கயம் அருகே ஒரே இரவில் 7 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட நஞ்சப்பகவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (77). விவசாயி. நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் வீட்டின் பின் பக்கம் உள்ள அறையில் தூங்கினார். முன்பக்கமாக மர்ம நபர் வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.4 ஆயிரத்தை திருடி சென்றார். இதே பகுதியைச் சேர்ந்த சாமியாத்தாள் (52) வீட்டிலும் புகுந்த மர்ம நபர் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றார். மேலும் மணி (52) என்பவரின் வீட்டில் ரூ.7 ஆயிரமும், சுப்பிரமணி (65) வீட்டில் ரூ.3 ஆயிரமும் திருடு போனது.
தாத்திக்காடு பகுதியில் பொன்னுசாமி (65) என்பவரது வீட்டில் ரூ.4 ஆயிரத்தையும், இதே பகுதியை சேர்ந்த அப்புக்குட்டி(72) வீட்டில் ரூ.5 ஆயிரம் மதிப்பில் பித்தளை பாத்திரங்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும் ஒரு வீட்டிலும் திருட்டு நடந்துள்ளது. ஒரே நாள் இரவில் ஏழு வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பைக் திருடிய வாலிபர் கைது
கூப்பிடு பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா
பஞ்சலிங்க அருவியில் கூட்டம் இல்லை
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாம்-ஏராளமானோர் பங்கேற்பு
பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உதவி கண்டுகொள்ளாத பஸ் டிரைவர்கள் பெண் தற்கொலை வழக்கில் சப்-கலெக்டர் விசாரணை
தாராபுரம் நகராட்சி பள்ளியில் ரூ.7 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி