SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 சட்டமன்ற தொகுதிகளில் 51.08 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு

10/1/2022 2:58:43 AM

ஊட்டி, செப்.30: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் இதுவரை 51.08 சதவீதம் பேர் ஆதார் எண்ைண இணைத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950ன் பிரிவு 23, உபவிதி (5)ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்களுடைய ஆதார் அட்டை குறித்த விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 6பி.,யில் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த 01.08.2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் ஆதார் எண்ணை பெறுவதன் நோக்கம் என்பது வாக்காளர் பட்டியலினை தூய்மையாக்குதல், வாக்காளர்களின் பதிவினை உறுதி செய்வதற்காகவும், தன் தகவல்களை உறுதிப்படுத்தி பாதுகாக்கவும், ஒரே வாக்காளரின் ஒரே தொகுதியில் பலமுறை பதிவாகி உள்ளதையும், வெவ்வேறு தொகுதிகளில் பதிவாகி உள்ளதை கண்டறியும் பொருட்டு வாக்காளர்கள் ஆதார் எண்ணை பெறுதல் என்பது வாக்காளர்கள் தானே முன்வந்து சுய விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே பெற்று வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 22.09.2022 வரை ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 54.20 சதவீதமும், கூடலூர் (தனி) 48.38 சதவீதமும், குன்னூர் தொகுதியில் 50.44 சதவீதமும் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தம் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 51.08 சதவீத வாக்காளர்களின் ஆதார் எண் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்ைட எண்ணுடன் (NVSP) மற்றும் Voter helpline app ஆகியவைகளின் மூலமும் ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களிலும் படிவம் 6பி.,யில் பதிவு செய்யலாம். வீடு தேடி வரும் வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் வாக்காளர்கள் தங்களது சுய விருப்பத்துடன் ஆதார் எண்ணை தெரிவித்து கருடா செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது படிவத்திலும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது சிறப்பு முகாம் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் தானாக முன்வந்து சுய விருப்பத்துடன் ஆதார் எண்களை உரிய படிவத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும், அனைத்து வேலை நாட்களிலும் வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடமும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் எண் இல்லாத வாக்காளர் இருப்பின் இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து தங்களது பதிவினை உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும், தேர்தல் ஆணையம் தகுதியேற்படுத்தும் நாளாக அறிவித்துள்ள ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள புதிதாக விண்ணப்பிக்கலாம். எனவே, அனைத்து வாக்காளர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தானாகவே முன்வந்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் சுய விருப்பத்தின் அடிப்படையில் இணைத்து வாக்காளர் பட்டியலை தூய்மையாக்கும் பணியில் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என  கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்